Friday, April 20, 2007

பாவம் ஜெகன்நாதன்

ஜெகன்நாதன் எந்த சாதியோ
சாத்திய அறைக்குள்
அடிமை பட்டம் பூட்டப்பட்ட
ஜெகன்நாதன் என்ன சாதியோ
எங்கள் நிழல் அவனுக்கு தீட்டாம்
சாத்திய கதவுக்கு சொந்தகாரர்கள்
சாசனம் எழுதினார்கள்
சாசன கதவுக்கு வெளியே நாங்களும்
உள்ளே ஜெகன்நாதனும்

வாசிக்க தெரியாதவனா ஜெகன்நாதன்
செவிட்டு பயலாய் இருக்கின்றானா
சாசனமும் மறுக்கவில்லை
எங்கள் அழைப்பும் அவன் கேட்கவில்லை

ஊர் கூடி பேசி பார்த்தோம்
நாட்டாமைகள் சிலர்
எங்களுக்கும் பாத்தியதை உண்டென்றார்கள்
அதை கேட்டு அவனை பார்க்க போக
நிழல் பட்ட தீட்டெடுக்க இரண்டு நாள் பூசை

நாட்டாமைகளும் சிறையிருக்கும் ஜெகன்நாதனும்
சேர்ந்திருக்க வாழ்த்தி விட்டு
வேறு சாமி பார்த்துக் கொண்டோம்

நன்றி; ndtv.com

1 comment:

குமரன் (Kumaran) said...

நிர்மல். ஜெகன்னாதன் பாவம் தான். எல்லோரும் அவனையும் அந்த நாட்டாமைகளையும் வாழ்த்திவிட்டு வேறு சாமி பார்த்துக்கொண்டால் ஜெகன்னாதன் இன்னும் பாவம். அன்று இராமானுஜரை அனுப்பி திருக்குலத்தாரை ஆலயப்பிரவேசம் செய்யவைத்ததைப் போல் இன்னொரு ஆசாரியரை அனுப்பி எல்லோரையும் தீட்டுக்குலத்தார் இல்லை; திருக்குலத்தார் என்று சொல்லி ஆலயம் தொழ வழி வகை செய்வான். இல்லையேல் அவன் இன்னும் பாவம் - பிழைக்கத் தெரியாதவன்.