Friday, April 13, 2007

திருச்சி - பாரத மிகுமின் நிறுவனம்

பாரத மிகு மின் நிறுவனம் திருச்சியில் உள்ள தனது கிளையில் 1000 கோடி ரூபாய் புதிய முதலீடு செய்து அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த உள்ளது.
திருச்சியின் வளர்ச்சியில் பாரத மின் மிகு நிறுவனத்தின் பங்கு குறிப்பிடதக்ககது. தொத்து வேலை(welding) மற்றும் நிர்மித(fabrication) பணிகளில் சிறப்பு மையமாக திருச்சியை வளர்ப்பதற்கு இது வழி வகுக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. புதிய வேலை வாய்புகளும் இதனால் உருவாகலாம். மார்ச் 31, 2007 வரையிலான பொருளாதார ஆண்டில் அதன் வரிக்கு முந்திய லாபம் சென்றைய ஆண்டை விட 103 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தாமோதர் பள்ளதாக்கு கார்பரேஷனின் மின்சார விரிவாக்க திட்டத்திற்காக உத்தரவை பாரத மிகு மின் நிறுவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க மின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பையும், தொழில் மேம்பாட்டையும் கொண்டு வருகின்றது.

திருவரம்பூர் சாலைகளை விரிவுப்படுத்தவும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள். பேருந்து ்நிலையத்தை ஒட்டி உள்ள கடைகள் பாதிக்கப்படலாம். ஆனால் சாலை வசதி மேம்பட்டு நெரிசல் தவிர்க்கப்படும்.

அப்பாவிடம் பேசும் போது மிகுமின் நிறுவனம் ்நிறுவப்பட்ட போது திருச்சி மக்களிடம் இதன் வருகை ்விலைவாசியை அதிகரிக்க செய்து திருச்சியினை பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது எனறு சொன்னார்கள். அந்த பயம் இப்போது அர்த்தமற்றதாகிவிட்டது.

1 comment:

Santhosh said...

BHEL வந்த கதையை படிச்சி இருக்கிங்களான்னு தெரியலை. காமராஜர் செய்த அருமையான விஷயங்களில் இதுவும் ஒன்று.
நிர்மல் உங்களோட சிறப்பே பொருளாதார பதிவுகள் தான் எங்க நட்சத்திரவாரத்தில அதை காணோம். :))