Friday, April 13, 2007

வங்கி , கடன் , அரசியல்வாதி

ICICI வங்கி அரசியல்வாதிகள், காவல்துறை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வக்கில்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறதாக செய்தி வந்துள்ளது. இதை குறித்து வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதை கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் வங்கிக்குள் நுழைந்து வங்கியின் கணிணி, சாளரங்கள் மற்றும் இதர பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். எதையுமே மிரட்டி அடித்து நொறுக்கி சாதிக்க நினைப்பர்கள் மக்கள் பிரதிநிதியானால் மக்களாட்சியின் கதி என்ன? எல்லோரும் எல்லா நேரமும் நியுட்டனின் மூன்றாம் விதியை காரணம் காட்டி வன்முறையில் இறங்கி அதனை நியாப்படுத்தி பேசினால் எதற்கு அரசு, சட்டம், ஒழுங்கு எல்லாம். இந்திய குடியரசு கட்சி நியுட்டனின் மூனறாம் விதியை மட்டும் சட்டமாக்கி விட்டு மற்றதை தூக்கி எறிய சொல்கிறதா?

அரசியலமைப்பின் முக்கிய உறுப்பினர்களை வங்கி ஒதுக்குகின்றது என வருத்தப்படுவதா இல்லை கடன் இல்லை என்றதற்கே வங்கியை ்நொறுக்குபவர்கள் நம்பி கடன் கொடுத்து கடன் திருப்பி கேட்டால் என்ன செய்திருப்பார்களோ. பாவம் வங்கிகள் என நினைப்பதா?

நன்றி; பிஸினெஸ் ஸ்டான்டர்ட்

2 comments:

Santhosh said...

//கடன் இல்லை என்றதற்கே வங்கியை ்நொறுக்குபவர்கள் நம்பி கடன் கொடுத்து கடன் திருப்பி கேட்டால் என்ன செய்திருப்பார்களோ. பாவம் வங்கிகள் என நினைப்பதா?//
வங்கிகளை தான் பாவம் என்று நினைக்க வேண்டும். மேலும் அரசியல் வாதிகளுக்கு எதுக்கு கடன் சொல்லுங்க அவன் அவன் பத்து தலை முறைக்கு சொத்து சேர்ந்து இருக்கான்.

நிர்மல் said...

Santhosh

Thanks