Wednesday, May 30, 2012

அங்கீகாரதின் அவசியம்

எதற்காக ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும். அந்த அங்கீகாரதின் அவசியம் என்ன? எந்த நோக்கில் அந்த அங்கீகாரம் முக்கியம் பெறுகின்றது என கேள்விகள் எழுப்பி பார்க்க வேண்டி இருக்கின்றது. ஒரு கல்வி சார்ந்த அறிவு அமைப்பு பிறந்து தன் செயலூக்கம் மூலம் தன்னை பொது தளத்தில் முன் வைத்து , விவாத படுத்தி, தான் வளர்ந்து அதன் வளர்ச்சியில் மொத்த சமூகத்தினை உள்ளடக்கி அந்த சமூகத்தின் உற்பத்தி கூறுகளை தனது கல்வி சார் கருவிகளால் தொடர்ந்து மறு ஆக்கம் செய்து நகர்ந்து சென்று இருக்கின்றது. அந்த கல்வி அமைப்பு தன் நிறுவன வடிவதினை பிரதி செய்து பலவாகுகின்றது. தன் கருவிகளின் பலனை உற்பத்தி கூறுகளில் காணும் நேரம் அதனை ஆவணபடுத்தி அளவிடுகின்றது. அந்த அளவுகளை விரிவாக்கும் தளத்தில் தன் செயல் கூறுகளை மறு வடிவம் செய்கின்றது. விரிவு காணும் பொழுது தன் அமைப்பினை துறை சார்ந்து பிரித்து கொள்கின்றது. இந்த பிரித்து விரிதல் தொடர் செயல் ஆகும்பொழுது இந்த வகை கல்வி அமைப்பு அதிக அளவு சமூக பங்கெடுபினை கோருகின்றது. புதிய உற்பத்தி கூறுகள் கல்வியிடம் இருந்து முளைத்தது போல , புதிய உற்பத்தி கூறுகள் தங்களுக்கு வேண்டிய கல்வியையும் ஒரு உற்பத்தி பொருளாக்குகின்றனர். இந்த உற்பத்தி சாதனங்கள் அதற்கான முதலீட்டினை சார்ந்து உள்ளன. கல்விக்கான முதலீடு பெருகுவது கல்வி செயல் பாட்டார்களினை விட குறையும் பொழுது முதலீட்டு சார்ந்த ஒரு போட்டி உண்டாகுகின்றது. ஆவனபடுத்தபட்ட அளவீடு கருவிகள் முதலீட்டினை உற்பத்தி பெருக்கும் அமைபுக்கே செலுத்தும் செயல் ஏற்படுகின்றது. ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்த வகை  கல்வி சார் அமைப்பின் ஒரு செயல்பாட்டாளர். அவரது கல்வி அமைப்பு ஒரு மாபெரும் மானுட மாற்றதினை உண்டு செய்து உள்ளது, அதுவே அவரது அங்கீகாரம். அந்த மாபெரும் மாற்றம் எந்த வகை அற செயல் பாட்டினை மானுட மனதில் உண்டு செய்தது என்பது வேறு ஒரு தளம் சார்ந்த கேள்வி.

இதன் மாற்றான கல்வி அமைப்பு ஒன்று இருந்து இருக்கின்றது. அது பிறந்தது. வளர்ந்தது. பின்னர் சுவீகாரம் செய்ய பட்டது. இந்த வகை கல்வி அமைப்பு உற்பத்தி கூறுகளை பாதிக்காத தளத்தில் செயல் ஊக்கம் கொண்டிருந்தது. எனவே கல்வி, விவாதம் போன்றவற்றை நிகழ்த்திய தளம் பெருமளவு சமூக பங்கெடுப்பு தேவை இல்லாத இடமாக இருந்தது.  உற்பத்தி கூறுகளுக்கு வெளியே உள்ள அமைப்பு கல்வியை ஒரு விசேட பொருளாக மாற்றி, கல்வி நூல்களை ஒரு குறியீடாக மாற்றி விட்டது. போதிய ஆவண படுத்தலும், அளவீடு செய்தலும் இல்லாத காரணத்தினால் ஒரு தேக்க நிலையை ஒரு கட்டத்தில் அடைந்தது. பெரும் நிறுவன படுத்த பட்ட கல்வி அமைப்புகள் உண்டாகி நிரூபணம் சார்ந்த விவாத முறைகள் வரவில்லை. இந்த வகை கல்வி அளவீடுக்கு அப்பாற்பட்டது ஆகி, சமூக மன நிலையாய் இல்லாமல் , தனி மனித அனுபவமாகி விட்டது. ஒரு சமூக உறுப்பினன் தன் சுய தேடலால் மட்டுமே இந்த வகை கல்வி அமைப்பின் உள்ளே செல்ல முடியும். சமூக கூட்டு பங்கு தேவை இல்லை. இந்த கல்வி  அமைப்பு மூலதனம் திரட்டும் உற்பத்தி கூறுகள் குறையும் காலத்து மங்கி போகின்றது.
இரண்டாம் வகை கல்வி கூறு தனது உற்பத்தி சார்ந்த இடங்களில் நீண்ட கால செயல்பாட்டின் காரணம் கொண்டு ஒரு அறிவு தொகுப்பினை உண்டாக்கியது. ஆவண படுத்தும் கல்வி அமைப்பு அந்த தளத்தில் பெருமளவு இல்லாததால் அவ்வகை அறிவு தொகுப்பும் அதிக அளவில் இழக்கப்பட்டது.     

இந்த இரண்டு அமைப்புமே சாமான்ய தளம் , விசேட தளம் என இரண்டு அடுக்கு உடையது. ஆனால் முதல் கல்வி அமைப்பு புறம் சார்ந்தது, அது வலு காண்பது அதிக அளவு சமூக பங்கெடுபின் மூலமே. அது அவ்வகை சமூக பங்கேடுபினை கொண்டு வரும் கருவிகளை தொடர்ந்து உண்டு செய்து கொள்கிறது.  இரண்டாம் அமைப்பு புற கூறுகள் மாற்றாதது , அதன் விசேட தளம் மெல்ல இறுகி போன ஒரு அமைப்பாக மாறி போனது, அதன் குறியீடு வகை கல்வி சமூகத்தின்  பல இடங்களில் குறியீடாகவே தங்கி விட்டது. இந்த இரண்டாம் வகை கல்வி சார் ஒரு கருத்து முதல் வகை கல்வி அமைப்பின் பிரதிநிதியின் அங்கீகாரம் காண்பது மிக கடினம்.

இந்த இரண்டாம் வகை கல்வி அமைப்பு தன்னை நிறுவன படுத்தி கொள்வதன் மூலமும், மதம் சார்ந்த வடிவத்தில் இருந்து நகர்ந்து தத்துவ, நவீன கல்வி தளத்தில் நகர்த்தி பல வகை உரையாடல்களை உண்டு செய்வதன் மூலமே தன்னை  வலு செய்து கொள்ளலாம். தன்னை மிக பூடகமாக கருதி , மத அடையாளதில் கரைந்து  பெரும்பாலருக்கு புரியாத ஒரு தளத்தில் இருப்பதே  தன் பெருமை என நினைத்தால் அதன் வளர்ச்சி மிக கடினமே.                        
   
நாம் பெருபாலும் நிற்பது முதல் வகை கல்வி அமைப்பில்தான் அதனால் தான்  ஸ்டீவன் ஹாக்கின்ஸ் இந்திய ஞான மரபின் வழி வரும் பிரபஞ்ச கருத்தினை அங்கிகரிக்க வேண்டும் என நினைக்கிறோம் என படுகின்றது           

No comments: