Wednesday, May 30, 2012

ஐரோப்பா வழி கல்வி முன் வைக்க பட காரணம்

ஐரோப்பா மட்டும் முன் வர காரணம் அதன் மானுட இணைப்பு சக்தியே. அந்த இணைப்பு  காலனி ஆதிக்கம் வழி நடந்தது. அந்த இணைப்புக்கு தொழிற்புரட்சி நவீன அறிவியல் தொழில்நுட்பம்  முதலியவை கருவிகள்.  ஐரோப்பா இந்த கருவிகளை கையாளும் விதத்தினையும், இந்த கருவிகள் வழி மேலும் புதிய அறிவியல் , தொழிநுட்ப  வளர்ச்சியை  உண்டாக்கும்  விதத்தினை  கண்டு  கொண்டது. அது அதன் சிறப்பு.   
 
மானுடத்தின் புற கருவிகள் கொண்ட சார்பு மிக பெரியது. அவை  மானுட  கூட்டு  சமூகத்தினை மிக பெரிய சலனத்திற்கு ஆட்படுத்தி உள்ளன. இந்த புற கருவிகளே மானுட அறத்தினை காலம் தோறும் வலிமை கொள்ள செய்கிறன. அரசியல்  கோட்பாடுகளை  உருவாக்குகின்றன. இந்த புற கருவிகள்  "ஏன்" எனும் மானுட மனதினை  மேம்படுத்தும்  சாத்தியத்தின் வெளிப்பாடுகள் . வெளிப்பாடுகளை உருவாக்குவதை  மட்டும் ஐரோப்பா செய்ய வில்லை , அதனை பயன்பாடு பொருளாய் நடை முறை படுத்தி மானுட இணைப்பினை  முன் வைத்தது.
 
என்று சக்கரம் தேவை பட்டதோ , என்று நெருப்பின் உருவாக்கம் செயற்கையாக  சாத்திய பட்டதோ அன்றே புற கருவிகள் உருவாகி விட்டன. இன்று இணையம் ,  அதி வேக  விமானங்கள்  என பல வடிவங்களில் அந்த கருவிகள் மானுட இணைப்பினை வலு செய்கிறன.  புதிய அரசியல், பொருளாதார  கோட்பாடுகளினை மானுட இணைப்பு   தளங்களில்  உருவாக்குகின்றன.   குடிமை உணர்வினை உண்டு செய்கிறது.  
 
புற கருவிகள்  மானுட   விழிப்புணர்வினை   உண்டாக்குகின்றன.  உன்னை போலவே உணர்ச்சியும் , உரிமையும் உடையவன் உன் சக மானுடன் என்பதை உணர செய்கின்றன. தகவல் பரிமாற்றமும், தகவல் சேகரிப்பும், பகிர்தலும் புதிய உச்சத்தினை தேடி செல்கிறது. மானுட இருள் மனதை 
பதற செய்யும் அளவிற்கு , அதன் ரகசிய அறைகளை தட்டி தகவலாய் மாற்றுகின்றது. 
 
எல்லா வகை தகவல் சேகரித்து பகிரப்படும் அளவுக்கு   அதனை உள்வாங்கி அறிவாய் மாற்றும் திறம்  இன்னும் மானுட அமைப்புக்கு கூடவில்லை. இந்த வேகம் நிச்சயம் ஒரு பரிணாம  வளர்ச்சியை தூண்டும் என நினைகின்றேன்.  ஐரோப்பா கல்வி /அறிவியல் அமைப்பு இந்த வகை சாத்தியங்களின் ஆரம்பம். 
 
இந்த தகவல் தொகுப்போ, சேகரிப்போ அதன் வாடிக்கையாளர் தகுதி பார்த்தோ ,தரம் பார்த்தோ தன்னை விஷேட படுத்தி கொண்டோ வருவதில்லை. அது தொகுத்து கொள்ள காரணம் அது ஒரு தகவல் என்பதால் மட்டுமே. அது எல்லாருக்கும் சாத்தியம் படும் இடத்தில்தான்  உள்ளது.    
 
இந்த கல்வி அமைப்பு தகவல்களை , தரவுகளை புனித படுத்துவதில்லை. கருவறைக்கு கொண்டு செல்வதில்லை. அதை குறித்த விலக்கம் இல்லாமல் போகின்றது. விவாதம் சாத்தியமாகின்றது.  போட்டு நசுக்கினாலும் மனம் பதட்டம் அடைய வேண்டாம்.
 
இந்த வகை கல்வி அமைப்பில் தகவல்களினால் , தரவுகளினால்  கிடைக்கும்  மெய்ஞான  அனுபவங்கள் இந்த கல்வி அமைப்பின் வெளியே செல்கிறது. அவை  தனியே  தளம்  கொள்கிறன.  இந்த தனி மனித அனுபவங்கள்  கல்வி  தளத்தில் விவாத படுத்தபடுதல் அமையாது. கருத்துகள்  முடங்குதல் அமையும்.  ஒரு தனி மனிதனின் தனி அனுபவம் அவனுக்கே உரித்தானது, ஒரு புத்தகம் , கவிதை, ஓவியம், சிற்பம், கலவி,  தியானம்   உண்டாக்கும்  அனுபவம்  அந்த  மனத்தால்  மட்டுமே  உணர கூடியது. ஓப்பிடு இல்லாதது. அதை வார்த்தை கொண்டு வார்க்கலாம். அதை மற்றொரு மனது அதே தளத்தில், அதே அளவில்  உணர கூடுமோ என்பதை நிரூபிக்க இயலாது.   அதை அளவீட போதுமான தகவலோ , தரவுகளோ கிடையாது. 
 
எனவே தகவல்கள் தரவுகள் கொண்ட கல்வி அமைப்பு , மெய்ஞானம் என கருத படும் அமைப்பின் வெளியே இருப்பது அவசியம். அந்த மெய்ஞான தளத்தில் இருந்து  ஒரு புதிய தகவல் உண்டாக்க படும் போது  அது மெய்ஞான தளத்தில் தேங்குதல் அமையாமல் ,  அவை மீண்டும்   தகவலாக,தரவுகளாக தொகுக்க பட்டு கல்வி அமைப்புக்குள் கொண்டு செல்ல படுகின்றது  அதை ஐரோப்பா புரிந்து கொண்டது.  
 
சீனத்தின் கண்டுபிடிப்பு அங்கிகாரம் மறுக்க படவில்லை. ஆனால் அந்த கண்டுபிடிப்பின் சாத்தியத்தினை விரிவு செய்து நடைமுறை படுத்தி  பெருமளவு பங்கேற்பாளர்களை உள்ளே கொண்டு வந்து வலுவான கல்வி அமைப்பாய்  மாற்றி மானுட  இணைப்பினை செய்தது   ஐரோப்பா.     
 

No comments: