மானுட தர்மம்
-----------------------------------------------------------------------
மானுட தர்மம் என்பது மானுடன் செய்யும் தொழி ல் அல்ல. மானுட தர்மம் என்பது மானுடனின் தேர்வு செய்யு ம் உரிமையே. பிரபஞ்சத்தில் ஒரு ஜீவாத்மா தன்னை ஒரு ஜீவாத்மா என உணரும் இடம் அந்த தேர்வின் பொழுதே. அந்த இடத்தில இருந்து ஜீவாத்மா பரமாத்மா இணைப்பு துவங்குகிறது என வைத்து கொள்ளலாம்.
இந்த தேர்வு செய்யும் உரிமை, அதன் முக்கியம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உணரபடவில்லை. இப்போது அந்த கால கட்டத்தினை தாண்டி செல்கின்றோம்.
"நாம்
எதைச் செய்தாலும் தாழ்வாக மட்டும் அல்ல, உயர்வாகவும் நினைக்காமல் அது
சமுதாயத்திற்காக செய்யப்பட வேண்டும் " எனும் சமுதாயம் எனக்கு
தெரிந்து அமைந்ததே இல்லை.அது ஒரு காந்திய கனவு. முற்காலத்தில் ஒரு கணியன் அதே போல ஒரு கனவு கொண்டிருந்தார்.
என்று குடும்பம் உருவானதோ அன்றில் இருந்தே தேவைக்கு மேல் சாப்பிட்டு, கலவிக்கு விரும்பி,சொத்து சேர்த்து , அதிகாரம் உண்டாக்கிதான் சமூகம் லௌகீக வாழ்வு வாழ்ந்துதான் வருகின்றது. என்று லௌகிக வாழ்வு சாத்திய பட்டதோ அன்றில் இருந்து உயர்வு தாழ்வு உண்டு.
இங்கு நான் முன் வைப்பது பொருளாதார சம நிலை சமுதாயம் அல்ல. நான் முன் வைப்பது சம நீதி , சம வாய்ப்பு சமுதாயம் . வேலை என்பது சமுதாய சேவை அல்ல. வேலை என்பது உருவானதே பொருளாதார கூறோடுதான். சில வேலைகள் கடினமான உடல் உழைப்பினை,
மிக சிரமமான வேலை
சுழலை, குறைந்த கூலியை, அதிக வேலை நேரம் கொண்டவையாக இருக்கும் . சில
வேலைகள் இவை போல் இருக்காது. சில வேலைகள் இவைகளுக்கு நடுவில் இருக்கும்.
ஒருவர் இந்த மூன்று வகை பட்ட வேலைகளில் ஒன்றினை தனது
விருப்பின் பேரில் தேர்ந்து எடு க்கும் பொது அதில் சிக்கல் இல் லை. அந்த வேலை அவர்களுக்கு நேர்ந்து விட படும் போதுதான் சிக்கல். அவர்களது குல தர்மமாக இருக்கும் போதுதான் சிக்கல்.
ஒரு சமூக உறுப்பினன் தனது விருப்பத்துக்கு ஏற்ப தனது வேலையை தேர்வு செய்யவும், தேர்வுக்கு உண்டான தகுதியை தே டவும் வழி செய்யும்
சமுதாயமே சம நீதி சம வாய்ப்பு சமூதாயம். சமூக உறுப்பினன் முயற்சி
வெற்றி ஆகலாம் , தோல்வி ஆகலாம். அது முக்கியம் இல்லை. ஆனால் அவ்வகை முயற்சி
சாத்திய படல் வேண்டும். இதைதான் தேர்வு செய்யும் உரிமை மானுட அறம் என்று
சொல்லி இருந்தேன்.
அறிவெனும் குறியீடு
------------------
அறிவை தொழலாம். அறிவின் முடிவின்மையை வணங்கலாம். அந்த முடிவின்மையை சரஸ்வதி என குறியீடாக நினைக்கலாம்.
அறிவின் தேடல் ஒரு தொடர் ஓட்டம்.அந்த ஓட்டத்தினை குறியீடாக்க கூடாது என்றே எண்ணுகிறேன். அறிவின் ஓட்டத்தில் வரும் ஆசான்கள், ஆவணங்கள் அனைத்தும் குறியீடாக்கி வணங்கபட்டால் எஞ் சி நிற்பது எது?.
அறிவின் சாரமாய் வரும் கருத்துகள் தொகுக்கபட்டு , விவாதிக்கபட்டு , உடைக்கபட்டு முன் நகர்தலே மானுட வளர்ச்சி மையம். மானுட அறம் என நாம் நினைப்பது இந்த அறிவின் வளர்ச்சியினால்தான் கட்டபடுகின் றது.
No comments:
Post a Comment