இந்த
சமூகத்தில் வணக்கத்துக்குரியவர்கள் உண்டு, வணங்கபடுவர்கள் உண்டு. முதல்
நிலை சிறந்தது, ஒருவரை அவரது கருத்து நிலைபாட்டின் படி பார்ப்பது. ஆசிரிய
வடிவம் போல் இருப்பதுவணக்கத்துக்குரிய நிலைப்பாடு. அந்த இடத்தில்
ஆசிரியரோடு கல்வி உண்டு, விவாதம் உண்டு. அங்கு கற்று கொடுக்க படுவது
சிந்தனையின் எழுத்துக்கள். அந்த எழுத்துகளை தொகுத்து வார்த்தைகளை,
வாக்கியங்களை அமைப்பது நம் செயல். ஆசிரியரே மொத்த சிந்தனை அமைப்பையும்
வார்த்து முளைக்குள் திணிப்பது இல்லை. சிந்திக்கும் தவம் நமக்குரியது.
ஏதேனும் ஒரு காரணத்தால் நம் செயல் வழி வரும் சிந்தனை உடைவதால் நாம்
உடைவதில்லை. புதிய சிந்தனை பழைய இடத்தினை நிரப்புகின்றது. முதல்
சிந்தனையோடையின் வழி இரண்டாம் கட்டம் நகர்கின்றோம்.
ஆசிரியரும்
தனது சிந்தனை கல்வியை மாற்றும் செயல் உள்ளவரே. புதிய பாடங்கள்
உருவாக்கவும் , முன் வைக்கவும், தான் முதலில் சொன்னவற்றினை மறு
பரிசீலனை செய்யவும் அவருக்கு உரிமை உண் டு. இந்த செயல்பாடு அவரை
வலிமை செய்கிறது. இதனால் கற்று கொடுத்த ஆசிரியர் காலாவதி ஆவதில்லை.
அவர் இருகிறார். அவர் வணக்கத்துக்கு உரியவரே.
மற்றொரு நிலைப்பாடு வணங்கபடுவது. இது ஒரு குறியீடாக மாற்றும் நிலைபாடு. கேள்விகளை,விவாதங்களை அகற்றும் நிலைபாடு. இது கோருவது பக்தியை மட்டுமே. பிரார்த்தனைகள் மட்டுமே சாத்தியம். பிரார்த்தனை கல்வி அல்ல. பிரார்த்தனைகள் வரங்கள் மட்டுமே தர இயலும். பிரார்த்திக்கும் ஒன் றினை
கேள்வி கேட்ட இயலாது. பிரார்த்தனை சில நேரம் காதலாய்,கோபமாய்
கூட வடிவம் கொள்வதாய் தோன்றும். அந்த வடிவங்கள் வெறும் பாவனையே.
பிரார்த்திக்கும் ஒன்றினை தாண்டி செல்ல இயலாது. அதற்கு நம்பிக்கை இடம்
கொடுக்காது.
ஒரு
கட்டத்தில் நாம் வணகுவது நமது அகங்கார செயல்பாட்டின் ஒரு வெளிப்பாடாய்
மட்டுமே முடியும். நாம் வணங்கும் வடிவம் கேள்விக்கு உள்ளாகும் பொழுது உண்மையில் உடைவது நமது
சொந்த அகங்காரமே. எந்த கேள்வியும் இல்லாமல் பக்தி வடிவில் தொகுக்கபட்ட
நம்பிக்கை உடைகையில் உடைவது நாமே. அதை கையாள்வது சுலபம் அல்ல. வணங்குவதை முன் வைத்து உரையாட முடியாது அவ்வகை உரையாடல் தனி ப்பட்ட தாக்குதலாய் மனம் உணர நிறைய வாய்ப்பு உண்டு. இதை தவிர்க்க இரு வழி உண்டு.
முதல்
வழி நம்பிக்கையின் மீதான பொது உரையாடலை தவிர்ப்பது. நம்பிகையாளராய்
இருக்கையில் அந்த நம்பிகைக்குள் மட்டும் உள்ளவரோடு உரையாடலாம்.
இரண்டாம் வழி வணங்கபடும் கருத்துகளை வணக்கத் துக்கு உரியதாய் மாற்றுவது.
No comments:
Post a Comment