Wednesday, May 30, 2012

அறிவியல் ஒரு ஆழ்மன அக செயல்பாடா?

பண்பாடு , மானுட கூட்டு மனது  எனும் சமூக கூறுகள்  நிகழும்  அரசியல்  ,  பொருளாதார அமைப்புகள் கொண்ட புற அமைப்பானது   தகவல்கள், தரவுகள் என  தொகுக்க பட்ட கல்வி அமைப்பின் மீதே  அமைந்துள்ளது.  எது சமூகம் , எவர் சிந்திக்க  முடியும், எது கருத்து  என்பதும் ,ஒருவரது ஆழ்மனது இயங்கும் விசை, திசை  முதலியவை  அவரது  புற காரணிகளால் அமையும் சமூக இருபிடத்தாலும், சாத்தியதாலுமே  நிகழ்கிறது.   ஆழ்  மனது  சூனியத்தில்  இருந்து  கருத்தினை உருவாக்குவது இல்லை. கருத்தின்பால் வரும்  செயல் சூனியத்தில் நிகழ்வதில்லை.  
மனிதனின் இயல்பான  "ஏன்"  எனும்  வழி திறக்கும், திறந்த கதவுகள் அதிகம். இது ஒரு ஆதி கேள்வி. இது மனிதனை ஐந்தறிவு உயிரிடம் இருந்து வேறு படுத்துவது. ஆனால் இப்படி ஒரு கேள்வி எழும் உயரம் மானுட  புற காரணிகள் கொண்டே அமையும்.  ஏன் எனும் கேள்வி எழுப்பும் எவரும், கேள்வி எழுப்படும் எதுவும் தகவலாகவோ , தரவாகவோ உரு மாறி நிற்பதில்லை. எனவே ஏன் எனும் தருணமே எல்லாவற்றுக்கும் சிறப்பு  என சொல்லி விட முடியாது. ஒரு தொடர் செயல் பாட்டின் வழியே மட்டுமே அது தரவாக, தகவலாக மாற்ற படுகின்றது.  செயல்  பற்றி இல்லாமல் துவக்கதினை மட்டும் சொல்வது மொத்த செயல் பாட்டையும்  குறியீடு மொழியில் மாற்றுவது 
போல் உள்ளது.
இது ஒரு தொடர் கதை.

No comments: