Monday, January 22, 2007

தண்ணீர் பிரச்சனையும் கருணாநிதியும்

ஒரு சாதாரணுக்கே சிரமமான பிம்ப ஒழிப்பை அரசியல்வாதியான கருணாநிதி செய்திருப்பதை பாராட்ட தோன்றுகின்றது. கழுத்தை பிடிக்கும் மாநில நிதிநிலைமை உள்ளபோது உதவிக்கு வரும் கரம் ஆன்மிகமயமானது என்ற போதும் அதை ஏற்றுக் கொண்டு தனிப்பபட்ட பிம்ப அரசியல் புறந்தள்ளியிருப்பது நல்ல விஷயம்.

கருணாநிதியின் துணைவியார் காலில் விழ துரை முருகன் தோத்திரம் பாட தயாநிதி மோதிரம் அணிந்திருக்க கண்ட புகைப்படமெதிலும் கருணாநிதி கரங்கட்டியோ முகத்தில் பரவசம் பொங்கியோ பார்க்கவில்லை. சரியாசனம் தன்னில் ஆன்மிகவாதியாடு அமர்ந்திருப்பதையே காணமுடிந்தது.

கடவுள் மறுப்பு கொள்கை காரணம் காட்டி தமிழக மக்களின் வாழ்வோடு அரசியல் சித்து புரியாமல் மாற்றுக் கொள்கை உடையோரையும் அரவணைத்து செல்லுதல் பாரட்ட வேண்டிய குணமே. மக்களின் ஜீவாதார பிரச்சனையான குடிநீர் பிரச்சனை நோக்கி பார்வை செலுத்தும் ஆன்மிகவாதியும் பாராட்ட பட வேண்டியவரே. எதையும் பிரதி உபகாரமாய் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் செய்திருப்பார் என நம்புகிறேன். ஊடகங்களிலும் ஆன்மிக தரப்பிலிருந்து கோரிக்கை எதுவும் வந்தது போல் தெரியவில்லை.

4 comments:

குமரன் (Kumaran) said...

நிர்மல்,

பேச்சுவாக்கில் பாபாவின் மீது ஒரு ஐயத்தைக் கிளப்பிவிட்டுவிட்டீர்கள். உங்கள் ஐயம் தீர இந்த வலைப்பக்கத்தில் இருக்கும் ஒளிப்படங்களைப் பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

http://www.saicast.org/serviceprojects.htm

சென்னைக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட தெலுங்கு கங்கை கால்வாயினை சீரமைக்க பாபா தனது 2004 வருட பிறந்த நாளன்றே அறிவிப்பினை வெளியிட்டுவிட்டார். அதனை உடனே பயன்படுத்திக் கொண்டது ஆந்திர அரசு. தமிழக அரசு இப்போது தான் முன் வந்திருக்கிறது. இப்போது இருக்கும் அரசிடம் அப்போதே அவர் பேரம் பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

சிறில் அலெக்ஸ் said...

இதை எப்படிவேண்டுமானாலும் பார்க்கலாம்.

மக்களின் காணிக்கைப் பணம் மக்களுக்கு பயன்படுவது நல்ல விஷயமே.

நிர்மல் said...

குமரன்,

பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

//தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் செய்திருப்பார் என நம்புகிறேன். ஊடகங்களிலும் ஆன்மிக தரப்பிலிருந்து கோரிக்கை எதுவும் வந்தது போல் தெரியவில்லை.
//

சிறில்

வரிப்பணம் டிவியாக மாறி சிரிக்கையில் உண்டியல் பணம் இங்கு உதவுகின்றது.

ஆன்மிகவாதி இங்கு ஒரு கால்வாய் போல இருப்பவர்களிடம் கொடை பெற்று இல்லாதவருக்கு அளிக்கின்றார்.

ஆன்மிகவாதிகள் கோவில் கட்டினால் கட்டுமான துறை சார்ந்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு சில காலமே. அப்புறம் கோவில் நிர்வாகம், பூசை சாமான்கள் கடை போன்ற விடயங்களே வேலைவாய்ப்பை உருவாக்கும். பலன் பெறுவோர் வட்டம் கொஞ்சம் சிறியது.

ஆன்மிகவாதிகள் இது போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்கையில் பலருக்கு பலகாலம் பயன். கருணாநிதி மேடை அமைத்து பாபாவை பாராட்டி அவருடைய நன்கொடையை ஊக்குவித்தது வேறு சில ஆன்மிக அமைப்புகளையும் உள்கட்டமைப்பு நோக்கி கொணர்ந்தாலும் கொணரலாம்.

குமரன் (Kumaran) said...

நான் சொன்னதில் ஒரு சிறு தவறு. 2004ம் வருட பாபாவின் பிறந்த நாளின் போது கால்வாய் பணி ஏறத்தாழ முடிவடைந்தது. அவர் 2002ம் வருடமே அறிவிப்பு செய்து அந்தப் பணி ஆந்திர எல்லை வரை 2004ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி முடிவடைந்தது. தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டிய எஸ்.கே.வுக்கு நன்றி.