மரபு இரு வகையில் பொருள் கொள்ள கூடியது என்பது என் எண்ணம். ஒன்று நமக்கு முன் வாழ்ந்த கோடானு கோடி மனிதர்களின் அறிவு வடிவம், மற்றொன்று பொருளாதார,அதிகார சிந்தனை ஒட்டி எழுந்த அடக்கு முறை கொள்ளும் அரசியல் வடிவம் என புரிதல் உண்டு. ஜெயமோகனை வாசிக்கும் முன் அரசியல் மட்டுமே கொண்டது மரபு என்ற எண்ணம் இருந்தது. பின்னர் அது மாறி விட்டது.
அரசியல் வடிவம் கொண்ட மரபினை எண்ணி 2006 ஆண்டு எழுதியது. இது ஒரு மன எழுச்சி கொண்டு எழுதிய கவிதைதான்.
மரபு
----------------------------
இப்படிதான் இருக்க வேண்டும்
அப்படிதான் இருக்க வேண்டும்
என்றார்கள்
அவர்கள் சொன்ன
இப்படியும் அப்படியுமில்
அடங்கி முடங்கினோம்
விதைகள் சில
எங்கள் தோட்டத்தில் விழுந்தது
நாங்கள் அதை கவனிக்கவில்லை
ஏனடா இதுவென
கூடி பேசிய பொழுது
இப்படிதான் பேச வேண்டும்
அப்படிதான் பேச வேண்டும்
என்று சொல்லிவிட்டார்கள்
பேசாமல் எழுதி கொடுத்தை
வாசிக்க ஆரம்பித்தோம்
வாசிப்புக்குள் பேசவும் கற்றோம்
மெல்ல களைகள் விதை
தாண்ட ஆரம்பித்தன
நாங்கள் அது தரும்
நிழலுக்குள் ஒன்டிக் கொண்டோம்
No comments:
Post a Comment