Monday, February 26, 2007

பெண்ணாயிருந்து பேசியிருந்தால்

நான் நான்தான்
நான் நானாக இருக்கின்றேன்
நான் என்னால் வரையரை செய்யப்படுபவள்

தாய் கருணை இரக்கம் அன்பு எனும் பாவனைகளால்
தனித்திருக்க மட்டும் நான் ஆள் இல்லை
காமம், பசி, வலி, சிந்தனை, கோபமும் எனக்கு உண்டு
கையில் இருக்கும் அளவுகோலை எறிந்து வந்தால்
கண் நோக்கி உரையாடலாம்.
சிநேகித்திருக்க எனக்கும் விருப்பம் உண்டு

எனக்கான கவலைகளுக்கு
காளான் குடையில் மழைக்கு ஒதுங்க வைப்பதான
குறைந்த பட்ச பால் சார்ந்த அனுதாபங்கள் வேண்டாம்
பால் தாண்டும் தீர்வுகள் இருக்கும்
சாவிகள் தேடி உடன் வர முடிவிருப்பின் வா

5 comments:

Anonymous said...

அருமையான கவிதை நிர்மல்.
நீங்க நிர்மலான்ற பொண்ணான்னு பாக்கப் போனேன் ப்ரொஃபைலுக்கு :)
இப்பதான் முதல்ல வர்றேன்.

இந்த கவித நிஜ வாழ்கை பெண் இயத்திற்கும் (Nature of women today!) ரொம்ப தூரம் இல்லை. இத்தகைய உண்மையை தனக்குள் ஒப்புக்கொண்ட பெண் கிடைப்பது இன்று சாத்தியம். ஆனா இதை அப்படியே வெளியே சொல்லக் கூடிய பெண்கள் மிகவும் கம்மி! :) ... அதுக்குப் பேர் தான் கலாச்சார போர்வை போல.

தமிழ்நதி said...

"பால் சார்ந்த அனுதாபங்கள் வேண்டாம்" நன்றாக இருக்கின்றன இந்த வரிகள். கவிதைப் பூச்சுகள் இல்லாமல் இயல்பாக எழுதுகிறீர்கள்.

செல்வநாயகி said...

நன்றாக இருக்கின்றன வரிகள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாக எழுதியிருக்கீங்க நிர்மல். வீட்டில் படிச்சாங்களா?

-மதி

நிர்மல் said...

மதுரா,தமிழ்நதி, செல்வநாயகி,

நன்றி.

மதி,

வீட்டு இருக்கவங்கதான் எழுத்துக்கு இன்ஸ்பிரேஷன்.

அலுவலகத்தில பொட்டி நிறைய தட்ட வேண்டியிருப்பதால் சமீபகாலமா அவங்க வலைப்பக்கம் வரதில்லை.