Monday, February 19, 2007

மதிய தூக்கம்

பெங்களூர் இந்திரா நகரில் உத்தியோகம் பார்த்த காலத்தில் உடனிருந்த சக தோழர் மதிய நேரம் கண்ணசர்ந்து விடுவார். இருக்கையில் உட்கார்ந்த சாயில் அழகாய் குறட்டை விட ஆளுக்கு இரண்டு தலையில் தட்டி எழுப்புவோம். மனிதர் கடைசி வரை மாறவில்லை. நாங்களும் தட்டுவதை நிறுத்தவில்லை.

இன்று பார்த்த செய்திபடி நண்பர் இதயத்திற்கு நலம் கிடைக்க உடற்பயிற்சி செய்ததாக நினைக்க ்வேண்டியிருக்கிறது. கிரேக்க நாட்டை சார்ந்த ஏதேன்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்சியாளர் ஒருவர் மதியம் தொடர்ந்து தூங்கி ஒய்வெடுக்கும் பலரை சோதித்து இந்த முடிவை வெளியிட்டுள்ளார். மதிய தூக்கம் அலுவலக வேலையினால் ஏற்படும் மண்டை சூட்டை தணித்து விடுகின்றது போலும்.

இனி தூங்கி விட்டு யாரேனும் கேட்டால் மருத்துவர் அறிவுரை எனக்கூறி விடலாம். உயிரினங்களில் காணப்படும் நாள் சுழற்சியினை அடிப்படையாக கொண்ட சிர்காடியன் ரிதம் என்பது உயிரினங்களின் மரபணுக்களியே பொதிந்துள்ளது. இந்த ரிதம் தூக்கத்தையையும் , விழிப்பையும் உயரினங்களிடத்து கட்டுப்படுத்துகின்றது. மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி இந்த ரிதத்தை கொண்டுள்ளது. வெளிச்சமும், இருளும் வெளிப்புற காரணிகளாய் சிர்காடியன் ரித்ததிற்கு உதவுகின்றன.

2 comments:

அறிஞர். அ said...

siesta - மதிய உணவுக்குப் பின் சிறிய தூக்கத்தின் சுகமே சுகந்தான். வெப்பமான நாடுகளில் மக்கள் மதிய சாப்பாட்டுக்குப் பின் சிறிது தூங்குகின்றனர்.

அரபு நாடுகளில் இன்றும் மதிய இடைவேளையில் தூங்குவதற்காகவே/ஓய்வெடுப்பதற்காக 2-3 மணிநேரம் இடைவெளி கொடுக்கின்றனர்.

SP.VR. SUBBIAH said...

ஆமாம் நண்பரே, நானும் மதியம் ஒரு மணி நேரம் தூங்குபவன் தான்
அதன் அருமை அப்படித் தூங்குபவர்களுக்கு மட்டுமே தெரியும்!:-)))