Monday, February 26, 2007

கணிணி துறையிலிருந்து ஒரு பார்வை

அண்மையில் பதிப்பிக்கப்பட்ட CRISIL நிறுவன ஆய்வு பதிப்பின்படி ஒவ்வாரு கணிணி துறை வேலையும் நான்கு வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறதாம்.

வேலையின்றி இருப்பதன் தவிப்பு வேலையில் இருக்கையில் தெரிவதில்லை. நீளும் இரவுகள், கையில் பிடிபடா எதிர்காலமும் கொடுக்கும் கவலை உக்கிரம் வாய்ந்தது. இன்று கணிணி துறையில் வேலையில் இருக்கும் பலர் சமூகத்தின் அடித்தட்டு அல்லது மத்திய தட்டை சார்ந்தவர்களே. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு அவர்களது தலைமுறையை முன்னுக்கு இழுக்கும் ஆற்றல் வாய்ந்தது. யாருடைய பரிந்ததுரையோ, கையூட்டோ அளிக்காமல் கல்வி தகுதியும், சொந்த புத்தியும் கொண்டு ்வேலைக்கு போன பலரை கணிணி துறையில் பார்க்கலாம். அவ்வாறு வேலை கிடைக்கும் தருணம் தரும் நிறைவு வார்த்தையில் அடங்காது.

கணிணி துறை இந்தியாவின் வேலைவாய்ப்பு துறைக்கு துண் போல் நின்று உதவுகின்றது. 2006 ம் ஆண்டு 1.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் கணிணி துறையால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

2007 ம் ஆண்டு கணிணி துறையின் ஏற்றுமதி 47.8 பில்லியன் அமெரிக்க டாலரை தொடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஒரு கூட்டு முயற்சியே. அரசின் ஆதரவு , கட்டுமானங்களில் கவனம், தனியார் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று வளரும் இந்த துறையின் முன்னேற்றம் மட்டுறுத்தப்பட்ட சந்தை பொருளாதாரத்தின் வெற்றிக்கு சிறந்த உதாரணமாகும்.

பொதுவாக அரசு உருவாக்கும் வேலைகளை கவனிப்போர், அரசின் மூதலீடுக்கு ஊழியரிடம் பொறுப்புணர்வு இன்றி இருப்பதை கண்டிருக்கலாம்.
மாறாக தனியார் மூதலீடு இருக்கையில் பணியில் ஊழியரின் கவனம் அளவீடப்படுகின்றது, அது ஊழியரின் வேலை செய்யும் திறனை அதிகரிக்கின்றது. ஊழியரின் திறன் அதிகரிக்க லாபம் அதிகரிக்கின்றது, அதனால் ஊழியரின் ஊதியம் அதிகரிக்கின்றது.

அரசுதுறை ்மெத்தனத்திற்கு விதிவிலக்குகளும் உண்டு. பாரத மிகுமின் நிறுவனம் போன்ற சில அரசு துறைகள் லாபகரமாக செயலாற்றி வருகின்றன. வளரும் பொருளாதாரத்தின் காரணமாக லாலுவின் திறம்பட்ட மேலாண்மையில் ரயில்வே துறையும் அருமையாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இவர் ரயில்வே துறையில் காட்டும் கவனத்தை பீகாரில் காட்டியிருந்தால் பீகார் தனது முன்னேற்ற பாதையை தொட்டிருக்கும்.

கணிணி துறையை காழ்ப்புணர்வோடு பார்க்காமல் அரவணைத்து , அதற்கான பாதையை அமைத்து இந்த துறையிலிருந்து பெற்ற அனுபவத்தை பிற துறைக்கும் அளித்து அரசு இயங்குகையில் இன்னும் பல குடும்பங்கள் சமூகத்தின் கீழ்நிலை அடுக்களில் இருந்து மேல் வரும்.

3 comments:

Anonymous said...

LAlau did for railways. It is joke he is reaping the benifits of Nitish Kumar.

நிர்மல் said...

அனானிமஸ்,

கீழ்காணும் சுட்டியை காணவும்

லாலு ரயில்வேக்கு செய்தது என்ன?

சாலிசம்பர் said...

பீகார் சில நூறாண்டுகளாகவே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்வதில் தனித்தன்மையுடன் விளங்குகிறது.

லாலூவின் ஆட்சியில் தான் பீகார் கெட்டுப்போய் விட்டதாக மீடியாக்கள் வேண்டுமென்றே பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன.

காரணம் அவர் மண்டல் கமிஷன் ஆதரவாளர் என்பது தான்.