Saturday, July 1, 2006

வலிக்கிறது

--
--சிறுகதை
--
கொஞ்ச நாள் முன்பு

மக்கா வெட்டனும்டா அப்பதான் தெளிவாங்க.-இது நான்.

இடம்- என் அலுவலக கேப்படிரியா

வெட்னா எப்படி சரியாகும்.அடிதடி அதிகம் தான் ஆகும்-அலுவலக தோழன்.

அப்படி இல்லடா. ஓரு பயம் வேணுமல்ல.இந்த மாதிரி ஓரு சான்ஸ் வரும் போது போட்டுடனும்.

உனக்கெல்லாம் சாவு வலி தெரியல.அதான் இப்படி பேசற.எந்த பிரச்சனைக்கும் 4 பொணத்தை வச்சி தீர்ப்பு சொல்ல முடியாது.

அட போடா.

இத விடு. என்னைக்கு ஊருக்கு போற.அதான் விசா,டிக்கெட்லாம் வந்துடுத்தே,எல்லாரிட்டயும் சொல்லிட்டு வல்லியா.

ஆமாம் மக்கா, போகனும், போறதினால வேல கூட போய்டுத்து. அடுத்த வார கடைசிதான் போவேனு நினைக்கிறேன். காரை கொண்டு போய் ஊர்ல போட்டு போறேன். இங்க இருந்தா ஆறு மாசம் ஓட்டாம வண்டி வீணா போயிடும்

தற்சமயம்

எரியும் கார் சீட்டின் லெதர் நாறுகிறது. கழுத்து வலிக்கிறது. திருப்ப முடியவில்லை. தூரத்தில் ஊருக்கு 30 கிலோ மீட்டர் போர்டு தெரிந்தது ,அது பக்கத்தில் பஸ் ஓன்று எரிவது தெரிகிறது. காருக்குள் நெருப்பு அனலடிக்கிறது. இனி அம்மா,அப்பாவை பார்க்க மாட்டேன் என தோனியது.கார் கண்ணாடி மூக்கில் குத்தி இருப்பதை பார்க்க முடிந்தது, ஆனால் அதை நகர்த்த முடியவில்லை. கை இருக்குமிடத்தில் இரத்தமே மட்டும் இருந்தது. கை எங்கேயோ காருக்குள் தான் விழுந்தது.

மக்கா வெட்னும்டா இவனுங்களை.-- வெளியில் பேச்சு சத்தம்.

இந்த பசங்களுக்கு நாம யாருனு தெரியுனும். நம்மலோடத எப்படிடா இவனுங்க கைய வைக்கலாம்.

போதும்டா.பெட்ரோல் வேஸ்ட் பண்ணாதே. மொனைல இன்னோரு கார் திரும்புது. அத புடி. கழட்டி பார்த்து ஆளை கொழுத்து. நம்ப ஆள்னா விட்டுடு.

அந்த கடைக்குள்ள இரண்டு பேர் பதுங்கறானுங்க வேற.அவனையும் பிடி.

யார் யாரோ ஓடும் சத்தம் கேட்டது.

காலில் நெருப்பு பிடித்துக் கொண்டது.கண் ஏனோ மங்கலாகுகிறது. என்னனு தெரியல்லை. சம்பந்தமே இல்லாமல் எனக்கு கேப்படிரியா பேச்சு நியாபகம் வந்தது.கழுத்தை ரொம்ப வலிக்கிறது.

No comments: