நான் ஆசிரியராக நினைக்கும் ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதமும் , அதற்கு ஆசிரியர் எழுதிய பதிலும்.
இந்த கடிதம் அதன் தொடர்ச்சியும், இறுதியும். இது ஆசிரியரின் கருத்து நிலையை மாற்ற வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு எழுத பட்டது அல்ல. ஒரு மாற்று கருத்து என்ற அளவில் சொல்ல படுகின்றது. உலகம் கருப்பு , வெள்ளை அன்று என்பதும் ஆசிரியர் சொன்னதே.
ஆசிரியருக்கு,
வணக்கம். தங்கள் பதில் கண்டேன். நன்றி. தமிழின் மசாலா பண்பாடு , மேடை பேச்சு மேல்தான் வளர்ந்தேன். தங்களது "யூத்" கட்டுரையில் எழுதப்பட்ட "யூத்" என்னும் அளவில்தான் அறிவு முதிர்ச்சி இருந்தது. அந்த தவறுகள் முதலில் உள்ளத்தில் ஒரு போதாமையை கொடுத்தன. நிறைவு இல்லை. அந்த போலித்தமான பூச்சு வேலைகள் கொடுத்த மனச்சோர்வினை தங்களது சங்க சித்திரங்கள், விஷ்ணுபுரம் போன்றவை கடக்க உதவின. அன்பு மனைவி இந்த புத்தகங்களை அறிமுக படுத்தி இந்த பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தாள். இந்த வாசிப்பு ஒரு மன நிறைவினை கொடுத்தது. தொடர்ந்து உங்களை வாசித்து வருகின்றேன். நான் பழகி வந்த மசாலா பண்பாட்டினை முடிந்த அளவில் தாண்டவே முயன்று வருகின்றேன்.
இப்போது இந்திய பண்பாடு , மரபு முதலியவற்றினை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்டு. என் பழம் மரபின் மேல் ஒரு அதிகார அரசியல் படர்ந்து உள்ளது. அதை ஒதுக்கி இலக்கியத்தையும், இசையையும் காணுதல் தற்போதைய முயற்சி. நான் கடிதம் எழுதுவது பெட்னாவினை குறித்த தங்கள் கருத்தினை மாற்றி அமைக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அல்ல.உங்களது கருத்து உங்களது அனுபவதின் மீது , நம்பிக்கையின் மீது நீங்கள் உருவாக்கியது. நான் சொல்ல விழைவது ஒரு மறுபக்கம் உண்டென்பதினை மட்டுமே.
பெட்னாவில் சினிமா நிகழ்வுகள் இல்லை என சொல்ல மாட்டேன். இருந்தது. அது வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. எனவே அது இருக்கும். ஆனால் கீழ் கண்ட நிகழ்வுகளும் இருந்தன என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்.
http://www.youtube.com/watch?v=vssynAcaLT0 ---- காவிய தலைவிகள் நாட்டியம்
http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk&feature=relmfu-- கண்ணதாசன் பாடலுக்கு நடனம்
http://www.youtube.com/watch?v=lmXGB4YYn4I&feature=related-- நீயூ ஜெர்சி தமிழ் சங்க நடனம்
http://www.youtube.com/watch?v=h1xyhDk1lAA-- சிலம்பாட்டம்
http://www.youtube.com/watch?v=icq_ahXTROk&feature=related- தமிழிசை (இதை நான் தவற விட்டு விட்டேன். இதில் நிறைய குழந்தைகள் பங்கு கொண்டன. நிகழ்ச்சி நிரல் பார்த்து தெரிந்து கொண்டேன்)
http://www.youtube.com/watch?v=BQGqQ_Lw_HM&feature=related- வீணை இசை (இதை நான் பார்க்க வில்லை )
இன்னும் ஒரு அருமையான நாட்டிய நிகழ்வு இருந்தது. அதை பார்த்தேன். அதன் ஒளி காட்சி கிடைக்கவில்லை. இந்த நாட்டிய நிகழ்வுகள் தேர்ச்சி பெற்ற கலைஞர்களின் உச்ச வெளிப்பாடு அல்ல.
ஒரு தொடக்க நிலை அனுபவங்களே. ஆனால் இவை புலம் பெயர் குழந்தைகளின் வெளிப்பாடு. பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்க மண்ணில் வேறுபட்ட இடங்களில் வாழும் தமிழ் பிள்ளைகள் தங்களை முன்வைக்க அமைக்க பட்ட தளத்தில் நிகழ்த்தும் வெளிப்பாடு.இங்கு நாம் காண வேண்டுவது மரபு கலை வடிவங்களில் மன மகிழ்வை , கலை வடிவின் நுணுக்கத்தினை அல்ல. தமிழ் நாட்டில் வாழும் பெற்றோருக்கு இல்லாத ஒரு சிரமம் இங்கு புலம் பெயர் தமிழனுக்கு உண்டு. தமிழ் வெளிப்பாட்டு தளங்கள் எங்கள் குழந்தைகளுக்கோ, எங்களுக்கோ எளிதானது கிடையாது. அவர்கள் ஒரு சாதாரண உரையாடலை தமிழில் நிகழ்த்துவது அதிசயமாக உள்ள இடத்தில் மரபு கலை வடிவங்களில் தமிழ் காண விழைவது மிக கடினமான ஒரு காரியம்.
இதை தவிர குழந்தைகளுக்கான தமிழன் தமிழச்சி நிகழ்வு, இலக்கிய வினாடி வினா நன்றாக இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். அதன் ஒளி காட்சியும் கிடைக்கவில்லை. நான் குடும்பதோடு செல்லவில்லை. என் நோக்கம் எஸ்.ராவோடு நேரதினை செலவிடுவது. நான் பால்ட்டிமோரிலும் தங்கவில்லை. எனவே மூன்று நாட்களும் தினசரி ஒரு வழி 60 மைல் கார் ஓட்டம் , எஸ்.ராவுக்கு அருகில் இருக்க முயற்சிப்பது என நேரம் செலவாகியது.
நான் மிக மதிக்கும் சில குடும்பங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றன . நான் இந்திய இசை மரபின் தொடர்ச்சியாக மதிக்கும் , தமிழ் கல்வி செயல்பாட்டில் பெரும் நேரம் செலவிடும் எனக்கு தெரிந்த குடும்பங்கள் தன்முனைப்போடு பங்கு பெற்றன. இங்கு உணவு கூடத்திலும் ,அரங்கிலும் ,அரங்குக்கு வெளியிலும் நான் பலரது உழைப்பையும் கண்டேன். இவர்களது செயல் எனக்கு பிடித்த விதத்தில் , எனக்கு பிடித்த தளங்களில் மட்டும் இருக்க வேண்டுமென நான் கோர இயலாது. ஆனால் எனக்கு விருப்பமான தளங்களிலும் கூட உண்டு என்பதை கண்டேன். முன்பே சொன்னது போல இது ஒரு மன மகிழ் நிகழ்வு. தமிழ் நாட்டில் உள்ள உங்களுக்கு பெரும் கூட்ட சூழலில் பல தமிழ் குடும்பங்கள் ஒன்றாய் காண வேண்டும் என்பது ஒரு சிறு ஆசை போல இருக்கலாம் , ஆனால் அது புலம் பெயர் சூழலில் கொடுக்கும் மன நெகிழ்வு சொல்ல இயலாது. திரை கடலோடி திரவியம் தேட வந்து எங்கள் அம்மா ,அப்பா ,உடன் பிறப்புகள் விட்டு தள்ளி வாழ்கிறோம். இந்த வாழ்வு எங்கள் தேர்வே,யாரும் கட்டாயாய படுத்தவில்லை. இந்த தேர்வின் காரணமாய் நிறைய திருமணங்கள் தவறவிட்டிருக்கின்றேன். மொட்டை அடித்தல் , காது குத்துதல் போன்ற சிறு நிகழ்வுகள் தவற விட்டிருக்கின்றேன். இங்கு மொத்தமாய் இத்தனை தமிழ் குடும்பங்கள் காண்கையில் கங்கையின் சங்கமதில் நீங்கள் சொன்ன மன நெகிழ்வே உண்டாயிற்று. கங்கையின் அசுத்தமோ. காசியின் நெரிசலோ முக்கியமில்லை. மனம் ஒரு விஸ்வரூப காட்சியை உருவாக்கி தருகின்றது. அது போலவே இங்கிருந்தது.
இங்குள்ள சில அரசியல்,அதன் வாதங்கள் , சினிமா வேகம் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் .ஆனால் அவை மட்டுமே அங்கே இல்லை.பிறவும் இருந்தன. ஆனால் அவை இல்லாத ஒரு தமிழ் இடத்தினை தேடி காணுதல் புலம் பெயர் சூழலில் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. நிச்சயம் என் பெண் இழிவாக காணாத ஒரு தகப்பனாக இருப்பேன் என நம்புகின்றேன். நீங்கள் எனது ஆசிரியர், உங்கள் வார்தைகள் சரஸ்வதி வடிவம். இது போல என்னை குறித்து சொல்லும் பொழுது சிறிது உறுத்துகின்றது .
ஏதோ ஒரு வகை அரசியலும் , அரசியல்பால் உண்டாகும் குறைபாடுகளும் எல்லா இடங்களிலும் உண்டு. எல்லா மக்கள் திருவிழாவிலும் உண்டு. வேறு வேறு வடிவங்களில், ஆனால் அதை காட்டி திருவிழாக்களை நிராகரிக்க வேண்டுமா?
அன்புடன்
நிர்மல்
Wednesday, July 18, 2012
Friday, July 13, 2012
தமிழ் விழாவும், ஆசிரியருக்கு எழுதிய பதிலும்
நான் ஆசிரியராக மதிக்கும் ஜெயமோகன் அவர்கள் பெட்னா நடத்திய தமிழ் திருவிழா குறித்து எழுதியது மன வருத்தம் தந்தது. இது நான் அவருக்கு எழுதிய ஒரு கடிதம்.
ஆசிரியருக்கு,
வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ் சுழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள் ,வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைகைக்கு ஏற்றது போல அதை வெளி படுத்தவும் செய்கிறனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைபையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.
இது ஒரு தமிழ் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரை தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு
தெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னை போல் மொழி பேசும் ஒருவனை , என்னை போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகதினை கண்போமா எனபது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு கானினும் தமிழ் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லா பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகதின் அனைத்து தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்கு தோன்றியது.
தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினை குறித்து எஸ்ரா பேசினார். அவருக்கு பின்னர் சுதந்திர போராட்ட அனுபவங்கள் குறித்து நல்ல கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்க்கு பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்து பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்கு கடிதம் எழுதியவர் இதை குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்கு படவில்லை.
ஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றி காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்து பேசினார், இலக்கிய வினாடி வினா நட்ந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.
இந்த நிகழ்வு நன்றாக நடக்க எனக்கு தெரிந்த வகையில் சில தன்னார்வ நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாக படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்த தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.
உதாரனத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கதிலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை அவர் கொளுத்தும் 104 வெய்லில் காருக்கும் உணவு கூடதுக்கும் சுமந்தலைந்தார். அவர்
உழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசதில் அவர்கள் உள்ளம் இருந்ததை கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.
அமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லா தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலது உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்கு திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அனைவருக்குமான பொதுவான ஒரு நிகழ்வு.
நிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு விழாவில் கலந்து கொண்ட பார்வையாளன் என்ற அளவில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டென காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவ்ளுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரை காணும் தருணங்களில் ஒன்று.

Tuesday, July 10, 2012
தக்ஷிணாமூர்த்தி தருணங்கள்
இரு ஆண்டுகள் முன்பு ஜெயமோகனை சந்தித்தேன். அவருடன் உரையாட போதுமான நேரம் இல்லை. மிக குறைவான நேரமே அவருடன் இருக்க முடிந்தது. அது மறக்க முடியாத துவக்கம். ஆசிரிய பார்வையின் அவசியதினை அறிமுகம் செய்தது.
இந்த வருடம் இரண்டு ஆளுமைகளை சந்தித்தேன். சான்ப்ரான்சிஸ்கோ ராஜனுக்கும், பெட்னா தமிழ் திருவிழாவுக்கும் , கார்திகேயனுக்கும், திருமூர்திக்கும், பாஸ்டன் பாலாவுக்கும் நன்றி பல.
தமிழின் எழுத்து ஆளுமைகளான நாஞ்சில் நாடன், எஸ்,ராமக்ருஷ்ணன் இருவரையும் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. இவை எனக்கு ஒரு தக்ஷிணாமூர்த்தி தரிசன தருணங்கள். புதிய பார்வைகள், புதிய கேள்விகள் , புதிய மொழி அனுபவங்கள் இவர்களால் வாய்த்தது. வணக்கதுக்கு உரிய ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த தருணங்களின் தொடர்ச்சியாய் சில புதிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது. அமெரிக்காவில் தமிழ் கல்வி ஒட்டிய செயல்பாடுகளும், தமிழக அரசியல் செயல்பாடும், பெரும் விழா கொண்டாட்ட மகிழ்வும், அதற்கு நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் நண்பர்களின் தன்னார்வ உழைப்பும் ஒரு பாடமாய் இருந்தது.

Wednesday, June 27, 2012
எல்லாம்
அமெரிக்காவில் கோடை காலங்கள் நீண்ட பகலையும், குறைந்த இரவையும் கொடுக்கும். இரவு சூரியன் மறைய ஒன்பது மணி கூட ஆகும். இது போன்ற ஒரு நாளில் இரவு உணவு முடித்து ஒரு நடை நடந்து வரலாம் என கிளம்பினேன். பள்ளி கூடங்கள் எல்லாம் முடிந்து போனதால் என்ன செய்வது என தெரியாமல் ஆட்டம் இடும் எனது ஐந்து வயது வாரிசு முந்தி கொண்டு செருப்பணிந்து காத்து நின்றது. நானும் அவளும் நடந்து போக ஆரம்பிதோம். ஆரஞ்சு நிற சூரியன் மனதுக்கு இதம். நடைபாதையை ஒட்டிய குளம் போன்ற மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறைந்து காற்று தொட்டு வீசியது. மகள் காற்றில் சிறகு விழும் பாவனையில் குதித்து நடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நிறைவான அனுபவம் தந்தது.
"கொஞ்சம் நில்லுங்கள் " யாரோ அழைத்தது போல் குரல் வர திரும்பினேன்.
ஒரு வயதான பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். வயது எழுவதுக்கு மேல் இருக்கலாம். வெள்ளை வேஷ்டி ,சட்டை போட்டு ஆறடிக்கு மேல் உயரமாக இருந்தார். கை கால்கள் தளர்ந்து முகம் சற்று சுருக்கமாக இருந்தது. நல்ல குறுஞ்சிரிப்பு ஒன்று முகத்தில் இருந்தது. யாரென தெரியவில்லை. யாருடைய தந்தையோ, யாருடையா மாமனாரோ எனக்கு சட்டென தோன்றவில்லை.
"ஹையா தாத்தா" மகள் கண்கள் விரிய எம்பினாள். சட்டென முகம் மலர்ந்தாள்.
"யாரடி தாத்தா" கிழவர் முகம் சுளித்தார்.
"வணக்கம் யார் நீங்கள் ? உங்களை எனக்கு தெரியுமா?" குழப்பமாய் கேட்டேன்.
"என்ன சொல்கிறாய் ?" பெரியவர் சலித்து கொண்டார்.
"கால கோளாறு. அதுதான் குழப்பம்" - மகள் மீண்டும் காற்றில் கால்களை துளாவி கைகளை இலையுதிர் கால இலையென ஆக முயன்றாள்.
மகளை பார்த்தேன் , இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தாள், ஒரு 20 வயது வடிவில் இருந்தாள். பயம் உடலெங்கும் வந்தது , படபடப்பானது, வலது கை வலித்தது, தலைக்கு ரத்த ஓட்டம் அதிகமானது, பைத்தியம் பிடித்ததா எனக்கு என தெரியவில்லை. ஐயோ என அலறினேன். சுற்றி நடை பயிலும் யாரும் என்னை திரும்பி கூட பார்க்கவில்லை.
"என் கண்ணே" என மகளை அள்ளி தூக்க போனேன். அழுகை ததும்பி வந்தது.
என்ன ஆனது என் மகளுக்கு என பயம் ஆட்டியது.
மகள் இன்னும் வளர்ந்திருந்தாள், அந்த கிழவர் இன்னும் இளமையானார். அவர் முகம் மிக குழப்பதில் இருந்தது. வானத்தில் இருந்து பனி பொழிய ஆரம்பித்தது.
"சங்கரா இது நீ இல்லை" என்றார் அந்த மனிதர்.
"நான் சங்கரன் இல்லையே" என்றேன். என் கால்கள் பூமிக்குள் புதைய ஆரம்பித்தன. அவை வெடித்து வேராக மாறுவது போல் இருந்தது.உடம்பின் எலும்புகள் வெடித்து வெளி வந்தன, அவை மரத்தின் கிளை போல மாறுதல்
கொண்டன. நான் உடைந்து ஆழ ஆரம்பிதேன். என் மகள் , மனைவி, பெற்றோர் ,வீடு, வேலை என எல்லாம் என்னை வீட்டு போக போவது உள்ளுக்குள் உலுக்கி எடுத்தது. என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை. எங்கோ தொலைந்து போனது போல இருந்தது.
"என்ன செய்கிறாய் இவனை" என கண்ணீரோடு என் மகளிடம் அந்த மனிதர் கேட்டார்
அவள் சிரித்தாள். கை கால்கள் சுழன்றன. அவள் காற்றில் தன்னை கரைத்து மீண்டு வந்து வந்தாள், மேலும் சிரித்தாள்.
உற்று மகளை பார்த்தேன். என் அம்மா போல இருந்தாள். அவள் கண்ணில் கனிவு வழிந்தது. இரு பற்கள் வெடித்து உதட்டின் வெளியே வந்திருந்தது.
" அஞ்சாதே" என்றாள். அவள் உதடுகள் பிரியவில்லை. ஆனால் என்னோடு பேசினாள்.
"அம்மா" என்றேன்.
கையில் வேல் எடுத்து என்னுள் கிழித்தாள். நான் ஒரு மரமானேன்.

சோமன் சரித்திரம்
சோமன் காலையிலிருந்தே ஒரு வித குதுகலத்திலிருந்தார். உண்மை, உழைப்பு, உயர்வு என உவன்னாவை விதவிதமாக உபயோகித்து பெரிய புரட்சி கட்டுரை ஒரு முழத்துக்கு எழுதியிருந்தார். அவரது எழுத்து திறமையிலும், பேச்சிலும் அவருக்கு தனி சிலாகிப்பு உண்டு. சீர்காழி கோவிந்தராசனை ஒத்த கணீர் குரலில் அவர் முழக்கமிடுகையில் ஊரே அசரும்.
இன வேங்கை சோமன் என அவரது அல்லக்கை வட்டராம் அவருக்கு பட்டம் அளித்து இருந்தது. இப்போதெல்லாம் அவரை யாராவது சோமன் என அழைத்தால் அவருக்கு ஒரு அவமரியாதையாகவே பட ஆரம்பித்ததுள்ளது. வேங்கையார் என்று அவரை அழைத்தலே அவருக்கு பிடித்திருந்தது.
அல்லக்கை வட்டாரம் அவரிடம் காரியம் சாதிக்க நினைக்கையில் எல்லாம் தென்னாட்டு வேங்கை, தமிழ்நாட்டு சிறுத்தை என வாயில் வந்த வார்த்தையெல்லாம் போட்டு பேசும் போது அவருக்கு முடியெல்லாம் சிலிர்க்கும்.
"பகுத்தறிவு வாழ்க. வேங்கையார் புகழ் ஒங்குக" - சப்தம் வெளியில் கேட்டது.
காலையில் கட்டுரை எழுதிவிட்டு சனிஸ்வரனுக்கு பூஜை செய்யும் வேளையில் கூட்டம் வந்தது வேங்கையாருக்கு எரிச்சலாய் வந்தது. ஆனாலும் வேறு வழியின்றி வெளியில் வந்தார். அடுத்த சனி பெயர்ச்சி வரும் வரையில் பிரதி சனி நெய் விளக்கு போடுமாறு ஆஸ்தான ஆருடர் கூறி சென்றதில் இருந்து விடாபிடியாய் கடைபிடித்து வருகின்றார்.
துவக்கத்தில் வேங்கையார் கடவுள் சிலையை உடைக்கவெல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார். முப்பந்தி ஐந்தாம் வயதில அவரது இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளைக்கு உடம்பு தொடர்ந்து சரியில்லாமல் போய் கொண்டிருக்கையில் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆருடரை சந்தித்தார். சும்மாவேனும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம் ஒன்றின் பெயரை சொல்லி மூன்றாவது கல்யாணம் கட்டினால்தான் குடும்பத்தில் நிம்மதி வருமென சொல்லி விட்டார். அதை கேட்டு அவருடைய இரண்டாம் மனைவியின் மூன்றாவது பிள்ளையின் உடம்பினுள் இருக்கும் நோய் கிருமிகள் அதிர்ச்சியில் செத்து விட பையன் தெளிவாக ஆரம்பித்தான்.
தோஷ நிவர்த்திகாக வேறு வழியின்றி வேங்கையார் தன்னுடைய சாதியில் தனக்கு தொடுப்பாக இருந்த ஒரு பெண்மணியின் தங்கையை கல்யாணம் செய்து கொண்டார். பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு இது இடையூறாக இருக்குமென்பதற்காக இந்த திருமண விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக வைத்து விட்டார்.
புரட்சி வேங்கை வாசலுக்கு வந்த போது அங்கிருந்த அல்லக்கைகள் எல்லாம் இன்னமும் மகிழ்சியாகி பகுத்தறிவு வாழ்க பகுத்தறிவு வேங்கை வாழ்கவென விடாமல் சப்தம் கிளப்பின. வேங்கையார் கண்கள் உன்னிபாக எவனேனும் சப்தம் போடாமல் இருக்கின்றதா என ஆராய்ந்தது. மூன்றாவது வரிசையில் நின்ற மாவட்ட செயலாளர் ஒருவன் சப்தம் போடாமல் இருப்பதை மனதில் குறித்துக் கொண்டார்.
" என்ன எல்லோரும் நலமா? உங்களையெல்லாம் பார்க்கையில் உள்ளம் பூரிக்கின்றது. " - சிம்மக் குரலில் பேசினார்.
கூட்டம் அதற்கும் கைதட்டியது. ஆய் போனீர்களா என அவர் கேட்டால் கூட கை தட்ட பழக்க படுத்தப்பட்ட அந்த கூட்டம் பகுத்தறிவு கடவுள் வாழ்க என கூவியது.
கூட்டத்தின் மையபகுதியிலிருந்து வாயெல்லாம் பல்லாக நற்றுணை நாரயணசாமி முன்வந்து பொன்னாடையை போர்த்தினார். நற்றுணை என்ற ஊரை சார்ந்தவர். ரோடு போடும் குத்தகை விஷயமாய் மாதா மாதம் வருவார்.
( தொடரும் )
( தொடரும் )
Subscribe to:
Posts (Atom)