அரசு விழாக்களில் பொன்னாடை போர்த்துவதற்கு பதிலாய் புத்தகம் பரிசாக வழங்குமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
இந்த நேரத்தில் மனதில் கேள்விகள் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை
மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு விழாக்களில் ஏன் பொன்னாடையோ, புத்தகமோ கொடுக்க வேண்டும்? மக்கள் பிரதிநிதி மக்களிடமிருந்து ஏன் இதை எதிர்பார்க்கிறார்?
இது போல் பரிசு பொருள்கள் வழங்க ஆரம்பித்தல் சிறிது சிறிதாய் காக்காய் பிடித்தல், சோப்பு போடுதல் போன்றவையாய் திரிந்து பரிசு வழங்குதலில் போட்டி மனப்பான்மையையும் உருவாக்கி தவறுகள் நடக்க அடி போடுகிறதல்லவா? இந்த தவறுகளை அரசு சட்டரீதியாக அங்கிகரிக்கிறதா?
அரசு அலுவலகம் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தவோ, புத்தகம் வாங்கவோ நிதி எங்கிருந்து கொண்டு வருகின்றார்கள்?
இதற்கு வரிப்பணம் பயன்படுத்தபட்டால் அது வீண் செலவு அல்லவா?
வரிப்பணம் இன்றி பிற வழி பணம் வசூலிக்கப்பட்டால் அது அரசு ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு பணம் கொடுப்பது போல் ஆகுமே? அது தவறில்லையா?
சிலைகளால் வரும் போராட்டமோ, சலசலப்போ இது போன்ற விஷயங்களுக்கு வருவதில்லையே ஏன்?
மக்கள் பிரதிநிதி எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் நேர்மையையாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறா?
வாழ்க மக்களாட்சி என்று சொல்லி கேள்விகளை தூக்கி புதைத்து ்விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியதுதான் போலிருக்கிறது.
3 comments:
அது என்னன்னா நிறைய பேரு ரொம்ப நாளைக்கு அமைச்சராவோ அல்லது MLA ஆவோ இருக்காங்க அதனால தான். நினைச்சு பாருங்க, ஒருத்தர் பத்து அல்லது பதினைந்து வருடம் MLA வா இருக்காருன்னா, அவரு வீட்ல எவ்வளவு சால்வையும், பொன்னாடையும் இருக்கும்??? அத வெச்சுக்கிட்டு மனுசன் என்னதான் பண்ணுவாரு? அதனால தான் இப்படி ஒரு மாற்றம். புத்தகமா கொடுத்துடுங்கன்னு சொல்றாங்க. விடுங்க அப்படியாச்சும் படிக்கட்டும். ஆனா இனி வாங்கப்போற புத்தகத்த வைக்கிறதுக்கு ஒரு வீடு வாங்கனும்ல, பின்ன அவ்வளவு புத்தகங்களை எங்க கொண்டு போய் வெக்கிறதாம்???? அதுக்காவது நம்ம வரி பணத்துல கைய வைக்காம இருந்தா சரி!
சுஜாதா பலதடவை இனி யாரும் எனக்கு புத்தகம் அனுப்ப வேண்டாம்னு கிட்டத்தட்ட கெஞ்சுனத நினைவில வெச்சுக்குங்க அரசு அதிகாரிகளே!! புத்தகத்தை பராமரிக்கிறது அவ்வளவு எளிதான விசயம் அல்ல!
//சிலைகளால் வரும் போராட்டமோ, சலசலப்போ இது போன்ற விஷயங்களுக்கு வருவதில்லையே ஏன்?//
ஏன்னெனில் இதில் எல்லா கட்சிகளுக்கும் பங்குண்டு.
இந்தப் கதராடையை பொன்னாடையாகப் அணிவிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் மேடையில் தான்.சால்வை கூட இல்லை..
அந்தப் பொன்னாடை - பெரும்பாலும் raymonds துணி இல்லைன்னா விலையுயர்ந்த துணி. நம்ம தலைவரின் அடித்தொண்டர்கள் அதனை காசாக்கித் தலைவரிடம் தந்து விடுவார்கள்..
ஆகவே! இந்தப் புத்தகங்கள் குறிப்பிட்ட கடையில் பில் போட்டு வாங்கப்பட்டு மீண்டும் அந்தக் கடையின் பின்வாசல் வழியாக உள்வரும்.
vat முறை - தடுக்குமே என்பார்கள் சிலர்.
ஆனாளப்பட்ட கமிஷன்களையும் ,சுப்ரீம் கோர்ட்களையும் தண்ணிகாட்டி ஏமாற்றும் நம் பொன்னான தலைவர்களுக்கு மட்டும் சட்டங்கள் செல்லாது..
சட்டங்கள் முட்டாள்களுக்கு அதாது மக்கள்களுக்கு மட்டுமே!
வாழ்க சனநாயகம்..!
முத்து,
செய்வது தவறு என்ற மனப்பான்மையே அற்று போய் கொண்டிருக்கிறது.
தமிழி,
மூளைசலவை மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. அதன் அறிகுறிகள்தான் இது போன்ற நிகழ்வுகள்.
Post a Comment